பறவை மனிதர் பால் பாண்டி

 #பறவை_மனிதர்_பால்_பாண்டி திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா தான். ஏனென்றால் அந்த ருசிகொண்ட பண்டம் அங்கு மட்டும்தான் கிடைக்கிறது திருநெல்வேலி தவிர்த்து வேறு எந்த மாவட்டத்திலும் திருநெல்வேலி அல்வா என்று சொல்லி விற்பனை செய்தாலும் அந்த ருசி வருவதில்லை ஏனென்றால் அதன் தனி சிறப்பு.

அதே திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம்  எனும் கிராமத்தில் பிறந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதரைத் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 0.5 மக்களுக்குக் கூட தெரியாது என்பது வேதனை தரும் செய்தி அப்படி என்ன செய்து விட்டார் இந்த நபர் இவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இந்த நபரைக் காண்பதற்கு யாரெல்லாம் ஆசைப்படுகிறார்கள் அவர்கள் பெயர் என்ன என்பதை உங்கள் பார்வைக்கு வைத்து விடுகிறேன் அந்தப் பட்டியலைப் பர்த்தாவது இவர் எவ்வளவு முக்கியமான நபர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஏனென்றால் நாம் பெரும்பான்மையாக ஒரு தனி மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பீடு செய்து விடுகிறோம்.


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

இந்தியா வந்தபொழுது இவரிடம் பேசி உள்ளார்


இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் சலீம் அலி அவர்கள் இவரைப் பார்த்து சலீம் அலியை விட அறிவு சார்ந்தவராக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இவருக்கு அலைபேசியில் அழைத்து ஓர் பறவையைப் பற்றி சந்தேகம் கேட்டுள்ளார்


நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் 35 ற்கும் மேற்பட்ட விருதுகள் தந்துள்ளனர் இவரைப்பற்றிய ஆவணப் படங்களுக்கு அங்கு தனி மதிப்பு உண்டு.


ஐயா நம்மாழ்வார் அப்துல்கலாம் இன்னும் எண்ணற்ற பெரும் பெரும் ஆளுமைகளிடம்  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்ற இந்த மனிதர் ஒரு போதும் அதில் அதைத் தலையில் ஏற்றி கொண்டதில்லை

ஒரு கன பொழுதிலும் அப்படி நடந்து கொண்டதும் இல்லை அப்படி என்னதான் செய்துள்ளார் இந்த மனிதர். 


தென் இந்தியாவின் பறவை மனிதர் என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா #பால்_பாண்டி அவர்கள் தான் சிறு வயது முதலே பறவைகளின் மீது அது இது அன்போடு அக்கறையோடும் இருந்துள்ளார் நாளடைவில் ஒரு தனி மனிதனின் அன்பு ஒரு ஒட்டுமொத்த கிராமத்தின் அன்பாக மாறியுள்ளது அதுதான் கூந்தன்குளம் எனும் கிராமம் இந்தியாவிலேயே முதல்முறையாக மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பறவை சரணாலயம் இந்த சரணாலயத்தைத் தவிர்த்து இந்தியாவில் நீங்கள் வேறு எந்த பறவை சரணாலயத்திற்குச் சென்றாலும் இங்கு இருக்கும் கட்டமைப்பை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது ஏனென்றால் பறவைகள் சரணாலயம் என்பது மனிதர்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைந்திருக்கும் ஆனால் இங்கோ கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டின் வாசலிலும் மரம் இருக்கிறது அந்த மரத்தில் பறவைகள் கூடு கட்டி இன பெருக்கம் செய்கிறது பறவைகளும் கிராமத்து மக்களும் ஒன்றாக வாழ்கிறார்கள் இங்கு வாழும் உள்ளூர் பறவைகள் வலசை வரும் பறவைகள் இந்த மக்களைக் கண்டு அச்சப்படுவது இல்லை இவை அனைத்திற்கும் காரணம் "பறவை மனிதர் பால் பாண்டி"


பறவைகளைக் காடுகளை இயற்கையை நேசிப்பதாக ஓர் திரை கதையை உருவாக்கி அதில் ஒரு கதாநாயகன் நடித்தால் இங்கே அவருக்குக் கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது அந்த நபர் கொண்டாடப்படுகிறார் ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் இந்த செய்யலையே தன்னுடைய அன்றாட வேலையாகச் செய்து வரும் சக மனிதனைப் பற்றி இங்கு யாருக்கும் தெரியவில்லை ஏனென்றால் அவர் சாதாரண

சாமானியர். 

ஏனென்றால் இம்மக்களின் பார்வையில் சாமானியர்கள் எப்படி சரித்திரம் படைக்க முடியும்.

வெளிநாடு உள்நாடு அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து வரும் birds photography எடுக்க ஆர்வமாக வரும் நபர்களை அழைத்துக்கொண்டு அங்கு வலசை வரும் பறவைகளைக் காண்பித்து அதில் வரும் ஒரு சொற்ப வருமானத்தையும் மீண்டும் பறவைகளுக்காகவே செலவு செய்கிறார்


கண்டம் விட்டு கண்டம் ஒரு பறவை நம்பிக்கையுடன் வருடம் வருடம் வலசை வருகிறது என்றால் அந்த நம்பிக்கையின் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் மனிதர்களிடமிருந்து வெகுவாக அனைத்து உயிரினங்களும் விலகிச் சென்றுவிட்டன அதிலும் குறிப்பாகப் பறவைகள் ஆனால் இந்த நபர் உடன் நீங்கள் கூந்தன் குளத்தைச் சுற்றி வந்தீர்கள் என்றால் பறவைகள் ஒருபோதும் உங்களைக் கண்டு அச்சம் கொள்ளாது இதில் முக்கியமான விசயம் என்னவெனில் அது பழக்கப்படுத்தப்பட்ட வீட்டு பறவை அல்ல காட்டு பறவை...

நன்றி : நம்மாழ்வார் வழியில்

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்