Posts

பறவை மனிதர் பால் பாண்டி

 #பறவை_மனிதர்_பால்_பாண்டி திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா தான். ஏனென்றால் அந்த ருசிகொண்ட பண்டம் அங்கு மட்டும்தான் கிடைக்கிறது திருநெல்வேலி தவிர்த்து வேறு எந்த மாவட்டத்திலும் திருநெல்வேலி அல்வா என்று சொல்லி விற்பனை செய்தாலும் அந்த ருசி வருவதில்லை ஏனென்றால் அதன் தனி சிறப்பு. அதே திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம்  எனும் கிராமத்தில் பிறந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதரைத் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 0.5 மக்களுக்குக் கூட தெரியாது என்பது வேதனை தரும் செய்தி அப்படி என்ன செய்து விட்டார் இந்த நபர் இவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இந்த நபரைக் காண்பதற்கு யாரெல்லாம் ஆசைப்படுகிறார்கள் அவர்கள் பெயர் என்ன என்பதை உங்கள் பார்வைக்கு வைத்து விடுகிறேன் அந்தப் பட்டியலைப் பர்த்தாவது இவர் எவ்வளவு முக்கியமான நபர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஏனென்றால் நாம் பெரும்பான்மையாக ஒரு தனி மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பீடு செய்து விடுகிறோம். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தபொழுது இவரிடம் பேசி உள்ளார் இந்தியாவி...

ஹல்தார் நாக் - பத்ம‌ஸ்ரீ விருதாளர்

 ஐயா, எனக்கு டெல்லி வரை வருவதற்கு பணம் இல்லை. தயவுசெய்து கொடுக்கும்     பரிசை போஸ்ட் மூலம் அனுப்பவும்..! பத்மஶ்ரீ விருது பெற்றவர் அரசுக்கு கடிதம். 3-ஜோடி உடைகள், கிழிந்த ரப்பர்   செருப்பு, உடைந்த மூக்கு கண்ணாடி,   வைப்பு தொகையாக 732-ரூபாய்க்கு   உரிமையாளர் திரு ஹல்தார் நாக். இவருக்கு பத்மஸ்ரீ விருது    அறிவிக்கப்பட்டுள்ளது..! கோஸ்லி மொழியின் பிரபல கவிஞர்   இவர்.! இதில் சிறப்பு என்னவென்றால்   இதுவரை இவர் எழுதிய கவிதைகள்,   20-காவியங்கள் எல்லாம், அவர்கள்   வார்த்தைகளிலேயே நினைவு   கூர்கிறார்..! அவர் எழுதிய 'ஹல்தார் நூலகம்-2'   தொகுப்பு சம்பல்பூர் பல்கலை கழகத்தில்   பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக   அமைக்கப்பட்டுள்ளது.  கசங்கிய உடை, பழுப்பு வேட்டி, துண்டு,   பனியன்,  வெறுங்காலுடன் வாழும்   வைரத்தை தான் அரசு  பத்மஸ்ரீக்கு பரிந்துறைத்ததே தவிர டிவி   சேனல்களில் தேடப்பட்டு அல்ல..! ஹல்தார் நாக் : உடியா நாட்டுப...

வேள்பாரி

 #Velpari வேள்பாரி… ஆகச்சிறந்த படைப்பு❣️ வேள்பாரியை வாசித்த பொழுது மூவேந்தர் எனும் மாயபிம்பம் உண்மையில் ஆட்டம் கண்டு தான் விட்டது.  வேள்பாரியானது சங்க இலக்கிய பாடல்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளை கொண்டு பின்னப்பட்ட ஒரு புனைவுக்கதை. கதையில் எழுத்துநடை, கதைக்கரு, காட்சி அமைப்பு, வசனங்கள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, வருணனைகள் மற்றும் அரியபெரும் தகவல்கள் என அனைத்துமே அபாரம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை நாம் பறம்பு மலையை சுற்றிப்பார்க்க, உணர, விரும்ப நம்மை வழிநடத்திச் செல்கிறார் பாரியின் உற்ற நண்பரான தமிழ்ப் பெரும்புலவர் கபிலர்.  ஐவகை நிலங்களுள் ஒன்றான குறிஞ்சி நிலத்தைச் சுற்றியே மொத்தக்கதையும் நகர்கிறது.  எனக்கு ஒரு சமயம் பயம் வந்துவிட்டது. காரணம், வெளியாட்கள் நுழைய முடியா பறம்பில் நாம் பாரியை பின்தொடர்ந்து அவனது நட்பை, கொடை உள்ளத்தை, அறம் காத்தலை, அரவணைக்கும் தாயுள்ளத்தை, காதலை, கூடலை, வீரத்தை, மதி நுட்பத்தை, தாவர விலங்கினங்கள்  பற்றிய அறிவை மற்றும் பறம்பின் ரகசியங்களை என எல்லாம் அருகில் நின்று கண்டு கொண்டிருக்கிறோமே, ஒருவேளை அவனது கோபம் நம்மீது திரும்பி வி...

சாலையோரப் பூக்கள்

Image
  சாலையோரப் பூக்கள் உன்னோடு பயணித்த ஒரு மணித்துளியில், உலக அதிசயம் கண்டேன்.. வேடிக்கை மனிதர்களுக்கு,  வேடமின்றி வேற்றுமை இ ல்லை.‌.  குற்றம் குறையல்ல, நிறைவு நித்தமுமல்ல.. உன் தோற்றத்தில்,  பலர் தோர்க்க கண்டேன்.. உன்னை கண்டதும்,  காற்றில் கரைந்த நான், வழியெங்கும் வீசுகிறேன் வாசனையாய்.. இருள் பயணங்கள் இறுதியாக,  வரும் பயணங்கள் வசந்தமாக,  வழியெங்கும் வண்ணமயமாக நான்..!!                           -சு.வைஷ்ணவி

அப்பா

முதியோர் இல்லத்தில் வாழும் பல தாத்தாகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.. அப்பா அன்னையின் முதல் அறிமுகம், உறவினர்கள் பெண்பிள்ளை என்று சலிக்க என் தேவதை என்றவர்.. தவழும் பருவத்தில் தவறி விழாமல் தாங்கியவர்.. எட்டி வைத்த முதலடியில் ஏணியாய் நின்றவர்.. மழலை மொழியை அணுஅணுவாய் ரசித்தவர்.. முதல் நாள் பள்ளிக்கு அனுப்பி தானும் குழந்தையைப்போல் அழுதவர்.. தன் குழந்தையின் தகுதியை உயர்த்த அயராது உழைத்தவர்.. தான் அரை ஆடையோடு இருந்தாலும் தன் குழந்தைக்கு புத்தாடை அணிவித்து அழகு பார்த்தவர்.. வறுமையில் வாடினாலும்  வருத்தத்தை வெளிப்படுத்தாமல் வளர்த்தவர்.. மகளின் படிப்பிற்காக மனைவியின் தாலியை அடகு வைத்தவர்.. பயிரிட்டு, மகளின் திருமணத்திற்கு பணம் ஈட்ட முயன்று தோற்றவர்.. பாசத்தை மறைத்து கண்டிப்பு வேகத்தோடு இருப்பவர்.. கடன் வாங்கி காடுகளை விற்று கடமைகளை முறையாய் முடித்தவர்.. கடன் அடைக்க கால்வயிறு கஞ்சியுடன் போராடியவர்.. மகளின் மகிழ்ச்சிக்காக வரதட்சணை கொடுத்தே மாண்டவர்.. போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்தவருக்கு வரமாக தெரிந்தது பேரன் மார்களின் வரவு… ...

Animals wearing mask pencil sketching

Image

இன்று புதிதாய்

இன்று புதிதாய் உலகமே வேகமாக ஓடிக் கொண்டிருக்க என் வாழ்க்கை மட்டும் நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல ஒரு எண்ணம். எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும் ஒரு சலிப்பான உணர்ச்சி, பிடிக்காத வேலை எதிர்பார்க்காத ஏமாற்றங்கள் என ஆனந்தம் இல்லா வாழ்க்கை. மன அழுத்தத்தின் உச்சியில் உறக்கமில்லா இரவில் ஊசி போன்ற கனவு, விடியற்காலையில். திடீரென்று ஒரு அழுகுரல் என் தாயின் சத்தம் அது. நான் இறந்து கிடக்கிறேன் பிணமாக. கடவுள் என் முன்னே தோன்றி, "நீ எங்கு செல்ல விரும்புகிறாய் சொர்க்கத்திற்கா நரகத்திற்கா ?" என்றார். "நான் பூலோகத்தில் மகிழ்ச்சியாக இல்லை சொர்க்கத்திலாவது மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்" என்றேன். கடவுள் "உன்னை நான் முழுமையாக ஊனமின்றி நோய் நொடியின்றி அழகான குடும்பத்துடன் படைத்துமே, உனக்கு மகிழ்ந்திருக்க தெரியவில்லை. நீ சொர்க்கத்திற்குச் சென்றால் அதையும் அனுபவிக்க மாட்டாய், எனவே நீ நரகத்திற்கே சென்றுவிடு" என்று சபித்துவிட்டார். அதிர்ந்துபோய் எழுந்த நான், உயிரோடு இருப்பதை உணர்ந்ததுமே பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாற்றம் தேடி மனம் ஓட, வெவ்வேறு கோணத்தில் அற...