இன்று புதிதாய்
இன்று புதிதாய்
உலகமே வேகமாக ஓடிக் கொண்டிருக்க என் வாழ்க்கை மட்டும் நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல ஒரு எண்ணம். எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும் ஒரு சலிப்பான உணர்ச்சி, பிடிக்காத வேலை எதிர்பார்க்காத ஏமாற்றங்கள் என ஆனந்தம் இல்லா வாழ்க்கை.
மன அழுத்தத்தின் உச்சியில் உறக்கமில்லா இரவில் ஊசி போன்ற கனவு, விடியற்காலையில். திடீரென்று ஒரு அழுகுரல் என் தாயின் சத்தம் அது. நான் இறந்து கிடக்கிறேன் பிணமாக.
கடவுள் என் முன்னே தோன்றி, "நீ எங்கு செல்ல விரும்புகிறாய் சொர்க்கத்திற்கா நரகத்திற்கா ?" என்றார்.
"நான் பூலோகத்தில் மகிழ்ச்சியாக இல்லை சொர்க்கத்திலாவது மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்" என்றேன்.
கடவுள் "உன்னை நான் முழுமையாக ஊனமின்றி நோய் நொடியின்றி அழகான குடும்பத்துடன் படைத்துமே, உனக்கு மகிழ்ந்திருக்க தெரியவில்லை. நீ சொர்க்கத்திற்குச் சென்றால் அதையும் அனுபவிக்க மாட்டாய், எனவே நீ நரகத்திற்கே சென்றுவிடு" என்று சபித்துவிட்டார்.
அதிர்ந்துபோய் எழுந்த நான், உயிரோடு இருப்பதை உணர்ந்ததுமே பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாற்றம் தேடி மனம் ஓட, வெவ்வேறு கோணத்தில் அறிவு வழிகாட்ட, வாழ்க்கைப் பாதையில் வாழ்வதற்காக நான், இன்று புதிதாய்…
- சு.வைஷ்ணவி
Arumai ❤️💕❤️💕
ReplyDelete