Posts

Showing posts from July, 2020

அப்பா

முதியோர் இல்லத்தில் வாழும் பல தாத்தாகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.. அப்பா அன்னையின் முதல் அறிமுகம், உறவினர்கள் பெண்பிள்ளை என்று சலிக்க என் தேவதை என்றவர்.. தவழும் பருவத்தில் தவறி விழாமல் தாங்கியவர்.. எட்டி வைத்த முதலடியில் ஏணியாய் நின்றவர்.. மழலை மொழியை அணுஅணுவாய் ரசித்தவர்.. முதல் நாள் பள்ளிக்கு அனுப்பி தானும் குழந்தையைப்போல் அழுதவர்.. தன் குழந்தையின் தகுதியை உயர்த்த அயராது உழைத்தவர்.. தான் அரை ஆடையோடு இருந்தாலும் தன் குழந்தைக்கு புத்தாடை அணிவித்து அழகு பார்த்தவர்.. வறுமையில் வாடினாலும்  வருத்தத்தை வெளிப்படுத்தாமல் வளர்த்தவர்.. மகளின் படிப்பிற்காக மனைவியின் தாலியை அடகு வைத்தவர்.. பயிரிட்டு, மகளின் திருமணத்திற்கு பணம் ஈட்ட முயன்று தோற்றவர்.. பாசத்தை மறைத்து கண்டிப்பு வேகத்தோடு இருப்பவர்.. கடன் வாங்கி காடுகளை விற்று கடமைகளை முறையாய் முடித்தவர்.. கடன் அடைக்க கால்வயிறு கஞ்சியுடன் போராடியவர்.. மகளின் மகிழ்ச்சிக்காக வரதட்சணை கொடுத்தே மாண்டவர்.. போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்தவருக்கு வரமாக தெரிந்தது பேரன் மார்களின் வரவு… ...

Animals wearing mask pencil sketching

Image

இன்று புதிதாய்

இன்று புதிதாய் உலகமே வேகமாக ஓடிக் கொண்டிருக்க என் வாழ்க்கை மட்டும் நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போல ஒரு எண்ணம். எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும் ஒரு சலிப்பான உணர்ச்சி, பிடிக்காத வேலை எதிர்பார்க்காத ஏமாற்றங்கள் என ஆனந்தம் இல்லா வாழ்க்கை. மன அழுத்தத்தின் உச்சியில் உறக்கமில்லா இரவில் ஊசி போன்ற கனவு, விடியற்காலையில். திடீரென்று ஒரு அழுகுரல் என் தாயின் சத்தம் அது. நான் இறந்து கிடக்கிறேன் பிணமாக. கடவுள் என் முன்னே தோன்றி, "நீ எங்கு செல்ல விரும்புகிறாய் சொர்க்கத்திற்கா நரகத்திற்கா ?" என்றார். "நான் பூலோகத்தில் மகிழ்ச்சியாக இல்லை சொர்க்கத்திலாவது மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்" என்றேன். கடவுள் "உன்னை நான் முழுமையாக ஊனமின்றி நோய் நொடியின்றி அழகான குடும்பத்துடன் படைத்துமே, உனக்கு மகிழ்ந்திருக்க தெரியவில்லை. நீ சொர்க்கத்திற்குச் சென்றால் அதையும் அனுபவிக்க மாட்டாய், எனவே நீ நரகத்திற்கே சென்றுவிடு" என்று சபித்துவிட்டார். அதிர்ந்துபோய் எழுந்த நான், உயிரோடு இருப்பதை உணர்ந்ததுமே பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாற்றம் தேடி மனம் ஓட, வெவ்வேறு கோணத்தில் அற...

காமே கவுடா

Image
தரிசு நில மலைப்பகுதியில் 16 குளங்களை அமைத்துள்ள 84 வயது முதியவர்.! மாண்டியா மாவட்டத்தில் குந்தினிபெட்டா என்ற பகுதியை குளங்கள் வெட்டி சீரமைத்துள்ளார் ஆடு மேய்ப்பவரான காமே கவுடா.! 84 வயதான காமே கவுடா மேற்கொள்ளும் பணிகளில் இருந்தே இவர் சுற்றுச்சூழலை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் வசித்த மலைப்பகுதியான குந்தினிபெட்டா தரிசு நிலமாக மாறி வந்தது. அப்போதுதான் மாண்டியா மாவட்டத்தின் மலவள்ளி தாலுகாவில் உள்ள தாசணடோடி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவரான காமே கவுடா, குளம் அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து நாற்பதாண்டுகளில் இந்த மலைப்பகுதியில் 16 குளங்களை அமைத்துள்ளார்.  இவர் இந்தப் பணியைத் துவங்கியபோது அவரிடம் இதற்கான நிதி இல்லை. தனது ஆடுகளை விற்று அதில் கிடைத்த தொகையைக் கொண்டு குளம் அமைக்கத் தேவையான பொருட்களை வாங்கினார். முதல் குளத்தை தோண்டுவதில் ஆறு மாதம் செலவிட்டார். கல்வியறிவு இல்லாதவர். இவருக்கு நிதியுதவியும் கிடைக்கவில்லை. இவர் இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கிறார். மிருகங்களும் பறவைகளும் அருந்த நீர் கிடைக்கவேண்டும் என்பதற்க...