Posts

Showing posts from May, 2020

ஆண் - என் பார்வையில்

ஆண்களும் அழகுதான், ஆண்டவன் படைப்பில்.. ஆண்களும் அழகுதான், அழகிய திமிரில்.. ஆண்களும் அழகுதான் அவன் அதிகாரத்தில்.. ஆண்களும் அழகுதான், பெற்றோரை பார்க்கையில்.. ஆண்களும் அழகுதான், மனைவியை மதிப்பதில்.. ஆண்களும் அழகுதான், தங்கையை தாங்குவதில்.. ஆண்களும் அழகுதான், தோழியை பாதுகாப்பதில்.. ஆண்களும் அழகுதான், மகளை மகாராணி ஆக்குவதில்..                         சு.வைஷ்ணவி

மலர்

Image
மலர் பேர் உலகமே பொறாமை கொள்ளும் பேரழகிகளின் போர்.. மங்கையும் மலர்களும்  மகத்துவங்களைப் பரிமாற, போர் துவங்கியது.. மலருக்கு வண்ணங்கள்,  மகளிருக்கு குணங்கள்..  மலருக்கு மென்மை,  மகளிருக்கு பெண்மை..  மலருக்கு நறுமணம், மகளிருக்கு நாணம்..  மலருக்கு மடல்கள்,  மகளிருக்கு பண்புகள்..  மலரின் முழுமை  மலர்தலில் முடியும், மகளிரின் முழுமை  தாய்மையில் தொடங்கும்..  மங்கையின் கர்வத்தால்,  மலர்களும் மயங்கின.. மங்கையின் மகிமைக்கு,  மலர்களும் மண்டியிட்டன..  மங்கையோ மலர்ந்தால்,  மலர்களும் மகிழ்ந்தன…                சு.வைஷ்ணவி

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

Image
கல்லுடைக்கும் தந்தைக்கு,  கால்வயிறு கஞ்சி..  கணினி தட்டும் மகனுக்கு,  கார் நிறைந்த வீடு..  படிக்காதவன்,  உடலால் உழைக்கிறான் .. படித்தவன்,  அறிவால் உழைக்கிறான்..  பெண்களோ,  விடுமுறையின்றி உழைக்கிறார்கள்.. உழைப்பாளியின் உரிமை, அவர்களின் பெருமை.. உழைத்துப் பார்,  உயரம் செல்வாய்..!! உளம்கனிந்த  உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்..!!                    சு.வைஷ்ணவி

முயற்சி

வாழ்க்கையோ ஒரு வெள்ளைத்தாள்,  உன் எண்ணங்களே அதன் வெளிப்பாடு.. வெறுமையாய் பார்த்தால் வெறுமை, முழுமையாய் பார்த்தால் முழுமை,  புதுமையாய் பார்த்தால் புதுமை..  வெள்ளைத்தாளும் வெற்றிபெறும், குழந்தையின் முதல் கிறுக்கலில்,  கவிஞனின் முதல் கவிதையில்.. வெள்ளைத்தாளை நிரப்பினால்,  வாழ்க்கை நிறையாது.. வெறும் கையெழுத்து கூட,  உன் கதை சொல்ல வேண்டும்.. பேனாவும் உன்னிடத்தில்,  வருங்காலமும் உன்னிடத்தில்,  வாழ்வதும் வீழ்வதும் உன் முயற்சியே..!!                    - சு.வைஷ்ணவி