முயற்சி
வாழ்க்கையோ ஒரு வெள்ளைத்தாள்,
உன் எண்ணங்களே அதன் வெளிப்பாடு..
வெறுமையாய் பார்த்தால் வெறுமை, முழுமையாய் பார்த்தால் முழுமை,
புதுமையாய் பார்த்தால் புதுமை..
வெள்ளைத்தாளும் வெற்றிபெறும், குழந்தையின் முதல் கிறுக்கலில்,
கவிஞனின் முதல் கவிதையில்..
வெள்ளைத்தாளை நிரப்பினால்,
வாழ்க்கை நிறையாது..
வெறும் கையெழுத்து கூட,
உன் கதை சொல்ல வேண்டும்..
பேனாவும் உன்னிடத்தில்,
வருங்காலமும் உன்னிடத்தில்,
வாழ்வதும் வீழ்வதும் உன் முயற்சியே..!!
- சு.வைஷ்ணவி
Comments
Post a Comment