Posts

Showing posts from August, 2019

அகதியின் குரல்

Image
  அகதியன் குரல் கிராமத்து காட்சியில் மாசற்ற மண்ணில் தோட்டத்து வீட்டில் தூய்மையின் துணையோடு தென்னந்தோப்பின் தென்றலோடு பயிர்களின் பசுமையோடு கிணற்றில் குளித்து காடுமேட்டில் திரிந்து வாழையடி வாழையாய் விவசாயி என்ற கர்வத்தில் வாழ்ந்த நான்... இன்று அகதியாக... மஞ்சள் மண்டிக்கும், மாற்றத்திற்கும், எதிர்நோக்கிய ஏழை விவசாயிகள்,, தலைமையின் தந்திரங்கள் அறியாது நிலங்களை தாரைவார்த்தனர். . தொழிற்பேட்டை வந்தது, தொழிற்சாலைகளும் வந்தது, வேலைவாய்ப்பும் வந்தது, வசதியும் வந்தது, கூடுதலாக, வியாதியும் வந்தது... வாடைக்காற்று வாடி வருடங்கள் ஆனது, கருந்துகல்களும், தூசுகளும், துர்நாற்றங்களும், துளிர்விட்டது.. வானவில்லின் ஏழு வண்ணம் பார்த்த நாம், நிலத்தடிநீரையே பலவண்ணங்களில் பார்க்கும் நிலை.. காவிரி ஆற்றையே கழிவுநீரால் , சாயநீரால் கலங்கப்படுத்திய கார்ப்ரேட் நிறுவனங்களும்,, காசிற்காக காற்றையே விற்கும் கள்ளன்களும்,, அதிகாரத்தை மறந்து அந்தஸ்திற்காக அயராது உழைக்கும் அரசாங்க ஊழியர்களும்,, வாடகைக்காக வடநாட்டவரின் வருகையை வரவேற்ற தியாகிகளும் சூழ்ந்திருக்க சொந்த...

Wall painting

Image