Posts

Showing posts from December, 2017

Farewell poem

பள்ளிப் பருவங்கள் கழிந்தன,,, மனதில் பல கனவுகளும் பல எதிர்பார்ப்புகளும்... கணிதமும் வேண்டாம் கணினியும் வேண்டாம் வாழ்க்கையை கற்க எண்ணினோம்... இனிமையான இலக்கியத்தை தேர்ந்தோம்... கல்லூரியில் முதல் நாள் முகம் தெரியாதவர்களாய்... புதுமையும் புதுமுகங்களும் சூழ முத்தான ஐம்பது முத்துக்களுடன்,, முதலாம் ஆண்டு மலர்ந்தது.... தேனிகளோடும் நண்பர்களின் அறிமுகத்தோடும் சில அறிவுரைகளோடும் தேர்வுகளோடும் ஆண்டு கழிந்தது... இரண்டாம் ஆண்டில் கேளிகளும் கிண்டல்களும் பொங்கியது... ஒற்றுமையில் ஓங்கி நின்று வெற்றி கண்ட ஆண்டு.... மூன்றாம் ஆண்டில் நட்புகள் அனைத்தும் சொந்தங்களானது... இமாலய சாதனையாய் வெற்றியில் கால் பதித்து நம் துறையின் பெருமை காத்தோம்... மீண்டும் ஒரு முறை ஒற்றுமையால் வென்றோம் இன்று... பல ஏமாற்றங்களும் சில சண்டைகளும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியது... கற்றதும் பெற்றதும் என்றும் அழியாதது, கற்றது சிலவாயினும் பெற்ற நினைவுகள் பல... பிரிவு நிலைநாட்ட கற்றது வழிநடத்த நினைவுகள் மகிழ்வூட்ட வாழ்வில் அடுத்த நிலைக்கு முன்னேறும் தருணம்... இ்ப்பிரிவு ...