சாலையோரப் பூக்கள்

 சாலையோரப் பூக்கள்


உன்னோடு பயணித்த

ஒரு மணித்துளியில்,

உலக அதிசயம் கண்டேன்..


வேடிக்கை மனிதர்களுக்கு, 

வேடமின்றி

வேற்றுமை இல்லை.‌. 


குற்றம் குறையல்ல,

நிறைவு நித்தமுமல்ல..


உன் தோற்றத்தில், 

பலர் தோர்க்க கண்டேன்..


உன்னை கண்டதும், 

காற்றில் கரைந்த நான்,

வழியெங்கும் வீசுகிறேன் வாசனையாய்..


இருள் பயணங்கள் இறுதியாக, 

வரும் பயணங்கள் வசந்தமாக, 

வழியெங்கும் வண்ணமயமாக நான்..!!



                          -சு.வைஷ்ணவி










Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்