மலர்
பேர் உலகமே பொறாமை கொள்ளும் பேரழகிகளின் போர்..
மங்கையும் மலர்களும்
மகத்துவங்களைப் பரிமாற,
போர் துவங்கியது..
மலருக்கு வண்ணங்கள்,
மகளிருக்கு குணங்கள்..
மலருக்கு மென்மை,
மகளிருக்கு பெண்மை..
மலருக்கு நறுமணம்,
மகளிருக்கு நாணம்..
மலருக்கு மடல்கள்,
மகளிருக்கு பண்புகள்..
மலரின் முழுமை
மலர்தலில் முடியும்,
மகளிரின் முழுமை
தாய்மையில் தொடங்கும்..
மங்கையின் கர்வத்தால்,
மலர்களும் மயங்கின..
மங்கையின் மகிமைக்கு,
மலர்களும் மண்டியிட்டன..
மங்கையோ மலர்ந்தால்,
மலர்களும் மகிழ்ந்தன…
சு.வைஷ்ணவி

Comments
Post a Comment