அப்பா

முதியோர் இல்லத்தில் வாழும் பல தாத்தாகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்..

அப்பா

அன்னையின் முதல் அறிமுகம்,

உறவினர்கள் பெண்பிள்ளை
என்று சலிக்க
என் தேவதை என்றவர்..

தவழும் பருவத்தில்
தவறி விழாமல்
தாங்கியவர்..

எட்டி வைத்த
முதலடியில்
ஏணியாய் நின்றவர்..

மழலை மொழியை
அணுஅணுவாய் ரசித்தவர்..

முதல் நாள் பள்ளிக்கு அனுப்பி
தானும் குழந்தையைப்போல்
அழுதவர்..

தன் குழந்தையின்
தகுதியை உயர்த்த
அயராது உழைத்தவர்..

தான் அரை ஆடையோடு இருந்தாலும்
தன் குழந்தைக்கு புத்தாடை
அணிவித்து அழகு பார்த்தவர்..

வறுமையில் வாடினாலும் 
வருத்தத்தை வெளிப்படுத்தாமல் வளர்த்தவர்..

மகளின் படிப்பிற்காக
மனைவியின் தாலியை
அடகு வைத்தவர்..

பயிரிட்டு,
மகளின் திருமணத்திற்கு
பணம் ஈட்ட முயன்று
தோற்றவர்..

பாசத்தை மறைத்து
கண்டிப்பு வேகத்தோடு
இருப்பவர்..

கடன் வாங்கி
காடுகளை விற்று
கடமைகளை முறையாய்
முடித்தவர்..

கடன் அடைக்க
கால்வயிறு கஞ்சியுடன்
போராடியவர்..

மகளின் மகிழ்ச்சிக்காக
வரதட்சணை கொடுத்தே
மாண்டவர்..

போராட்டத்தையே
வாழ்க்கையாக வாழ்ந்தவருக்கு
வரமாக தெரிந்தது
பேரன் மார்களின் வரவு…

பேரனை தலையில் வைத்து பெருமையாக ஊர் முழுவதும் வலம் வந்தவர்..

முதுமை காலத்தில்
பேரனுடன் வாழ
பேராசை கொண்டவர்..

மகளின் வரவால்
மனைவியை மறந்தவர்
மனைவியின் மறைவால்
தனிமையை உணர்ந்தவர்..

முதுமையில் தவித்தவருக்கு
முதியோர் இல்லத்தில்
அனுமதி வாங்கி வந்தால் மகள்..

வாழ்க்கையின் எதார்த்தத்தையும் விதியின் விளையாட்டையும்
கண்டு வியந்தார்..

அன்பிற்கும்
ஆதரவிற்கும் ஏங்கி
காத்திருந்தார்
முதியோர் இல்லத்தின்
வாயிலில் கண்ணீரோடு..!!

                   -சு.வைஷ்ணவி

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்