ஆழ்ந்த இரங்கல்



உன் வளம் காட்ட,
என் வனம் அழித்தாய்..
உன் வசதிக்காக,
என் வாழ்வாதாரம் அழித்தாய்..
இன்று
உன் சுயநலத்திற்காக,
என் சிசுவையும் அழித்தாய்..

பசித்த வயிறுக்கு,
பாசத்தோடு
பட்டாசு விருந்தளித்தாய்..

பழங்களைக் கண்டதும்,
பால்மனம் வாழ்த்தியது..

விருந்து முடிந்ததும்,
உயிர் மன்றாடியது..

நம்பிக்கை இல்லா நாட்டில்,
சுயநலவாதிகள் சூழ்ந்திருக்க..

விட்டுச்செல்ல மனமில்லாமல்,
அழைத்துச் செல்கிறேன்,
அன்பு மகளையும் என்னுடனே…

பாவங்களில் பங்கெடுத்தாய்,
துரோகங்களில் தலைசிறந்தாய்..

கர்ம வினை ஒன்று உண்டு..
காலங்கள் கற்பிக்கும்,
என் காயத்திற்கான மருந்தை..!!

             சு.வைஷ்ணவி

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்