இயற்கையின் அழிவில் மனிதனின் பங்கு

மனிதா !

இயற்கை இல்லத்தில்
இனிந்து வாழ்ந்தாய் அன்று,
செயற்கை மோகத்தில்
சொகுசாய் வாழ்கிறாய் இன்று..

விளைவோ,

அறுவடை நிலங்களோ மலடியானது,
நிறமற்ற நீரோ வண்ணமயமானது,
தென்றல் காற்றோ தூசானது,
மாசற்ற மழையோ அமிலமானது,

மரங்களோ மடிந்தது,
மண்புழுக்களோ மறைந்தது,
சிட்டுக்குருவிகளோ குறைந்தது,
சிறு உயிர்களோ சிதைந்தது..

உன் வளர்ச்சியால்,

கடலிலும் கழிவுகலந்தாய்,
ஓசோனையும் ஓட்டையிட்டாய்,
காற்றையும் ஆக்கிரமித்தாய்,
ஆற்றுமணலயும் அபகரித்தாய்.

மஞ்சப்பை மறந்தாய்,
நெகிழியை நேசித்தாய்..
மண்மனம் மறந்தாய்,
மாற்றங்களை நேசித்தாய்..

வனங்களை அளித்தாய்,
விலங்குகள் வீதிக்கு வந்தது.. வளங்களை அளித்தாய்,
வருங்காலம்.?

நீரில்லா நிலத்தை,
வேரூன்றி காப்போம் !
வளமையை மீட்டெடுப்போம் !!

இயற்கை இல்லையேல்,
மனிதன் இல்லை..
மறந்தவன் தோற்பான் !
உணர்ந்தவன் வெல்வான் !

                  -  சு.வைஷ்ணவி

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்