வேள்பாரி
#Velpari வேள்பாரி… ஆகச்சிறந்த படைப்பு❣️ வேள்பாரியை வாசித்த பொழுது மூவேந்தர் எனும் மாயபிம்பம் உண்மையில் ஆட்டம் கண்டு தான் விட்டது. வேள்பாரியானது சங்க இலக்கிய பாடல்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளை கொண்டு பின்னப்பட்ட ஒரு புனைவுக்கதை. கதையில் எழுத்துநடை, கதைக்கரு, காட்சி அமைப்பு, வசனங்கள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, வருணனைகள் மற்றும் அரியபெரும் தகவல்கள் என அனைத்துமே அபாரம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை நாம் பறம்பு மலையை சுற்றிப்பார்க்க, உணர, விரும்ப நம்மை வழிநடத்திச் செல்கிறார் பாரியின் உற்ற நண்பரான தமிழ்ப் பெரும்புலவர் கபிலர். ஐவகை நிலங்களுள் ஒன்றான குறிஞ்சி நிலத்தைச் சுற்றியே மொத்தக்கதையும் நகர்கிறது. எனக்கு ஒரு சமயம் பயம் வந்துவிட்டது. காரணம், வெளியாட்கள் நுழைய முடியா பறம்பில் நாம் பாரியை பின்தொடர்ந்து அவனது நட்பை, கொடை உள்ளத்தை, அறம் காத்தலை, அரவணைக்கும் தாயுள்ளத்தை, காதலை, கூடலை, வீரத்தை, மதி நுட்பத்தை, தாவர விலங்கினங்கள் பற்றிய அறிவை மற்றும் பறம்பின் ரகசியங்களை என எல்லாம் அருகில் நின்று கண்டு கொண்டிருக்கிறோமே, ஒருவேளை அவனது கோபம் நம்மீது திரும்பி வி...
Comments
Post a Comment